Categories
கிரிக்கெட் விளையாட்டு

அம்பத்தி ராயுடுவை புகழ்ந்து …ட்விட்டரில் பதிவிட்ட சேவாக்…! வைரலான ட்விட் …!!!

மும்பைக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடுவை பற்றி ,சேவாக் பதிவிட்ட ட்விட்டர் பதிவு , தற்போது வைரல் ஆகியுள்ளது.

நேற்று டெல்லியில் நடைபெற்ற 27 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கை தேர்வு செய்ததால், சிஎஸ்கே முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் குறிப்பாக அம்பத்தி ராயுடுவின் ஆட்டம் வெறித்தனமாக இருந்தது. இவர் 27 பந்துகளில் 7 சிக்சர் 4 பவுண்டரிகளை அடித்து 72 ரன்களை குவித்தார்.

இந்தநிலையில் அம்பத்தி ராயுடுவின் வெறித்தனமான ஆட்டத்தை கண்ட சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அம்பத்தி ராயுடுவின் 3D  கிளாஸ், எப்படி வேலை செய்கிறது என்றும் , இந்த சீசனில் பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்று ,முதல் இன்னிங்ஸ் முடித்தவுடன் ,சேவாக்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார். அவரின் அந்தப் பதிவு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |