Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கும்பமேளாவுக்கு சென்ற 82 பேர்…. தனிமைப்படுத்தப்பட்ட 70 பேர்…. செய்யப்பட்டது கொரோனா பரிசோதனை….!!

கும்பமேளாவுக்கு சென்று வந்த பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் ஏழுமலை பகுதியில் உள்ள 82 பேர் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு சென்றிருந்தனர். அதன்பின் கும்பமேளா முடிந்தவுடன் அவர்களில் 70 பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். அவர்களை பேரையூர் தாசில்தார் சாந்தி தலைமையிலான வருவாய் துறையினர் சின்ன கட்டளையில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தி தங்க வைத்துள்ளார்.

அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்கள் அவரவர் வீடுகளுக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் கொரோனா சிகிச்சை மையத்திற்கு அனுப்பப்படுவார்கள் என வருவாய்த் துறையினர் கூறியுள்ளனர்.

Categories

Tech |