தேசிய நெடுஞ்சாலையில் விபத்தை தடுப்பதற்கு ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பாண்டியராஜபுரம் தொடங்கி வாடிப்பட்டி வரை உள்ள நான்கு வழி சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனால் அப்பகுதியில் விபத்தை தடுப்பதற்காக ரூபாய் 4 1/2 லட்சம் மதிப்பீட்டில் ஒளிரும் விளக்குகள் அமைக்கும் படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த வேண்டுகோளுக்கிணங்க விராலிமலை பிரிவு, தனிச்சியம் பிரிவு, அய்யன்கோட்டை ஆகிய இடங்களில் நான்கு வழி சாலையில் இருபுறமும் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டு செயல்பட தொடங்கியுள்ளது.