Categories
மாநில செய்திகள்

அருப்புக்கோட்டை, பெரம்பலூர், கந்தர்வகோட்டையில் திமுக வெற்றி…!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு  தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் முதல் கட்டமாக தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தொகுதிகளில் இறுதிகட்ட வாக்கு எண்ணிக்கையும், சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையும் முடிவடைந்து வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கந்தர்வக்கோட்டை தொகுதியில் திமுக கூட்டணி சிபிஎம் வேட்பாளர் சின்னத்துரை அதிமுக வேட்பாளர் ஜெயபாரதி விட 13,592 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். அருப்புக்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றுள்ளார். பெரம்பலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகரன் அதிமுக வேட்பாளர் தமிழ்ச்செல்வனை விட 31,036 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Categories

Tech |