உங்களுக்கு உண்மையாக இருப்பேன், உங்களுக்காக உழைப்பேன் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக தொடக்கத்திலிருந்தே முன்னணியில் இருந்த நிலையில் 153 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து பல்வேறு தலைவர்களும் திமுக தலைவர் மு. க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திராவிட முன்னேற்ற கழகம் ஆறாவது முறையாக ஆட்சி செலுத்த கட்டளையிட்ட தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதை தொடர்ந்து மு.க ஸ்டாலின் உங்களுக்கு உண்மையாக இருப்பேன், உங்களுக்காக உழைப்பேன், எந்தன் சிந்தனையும் செயல்பாடும் இந்நாட்டு மக்களுக்கு தான். இந்த வெற்றிக்கு மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றி என்று தெரிவித்துள்ளார். கட்சிகளின் கூட்டணியாக இல்லாமல் கொள்கைகளின் கூட்டணியாக கழகத்தோடு இணைந்து தோள் கொடுத்த தலைவர்கள் மற்றும் இயக்கத்தை சேர்ந்த தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி என்று மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.