இருசக்கர வாகனத்தை திருடிய 2 நபர்கள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள சமயநல்லூர் பகுதியில் வினோத் குமார் என்பவர் தனது வீட்டின் முன்பாக தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்கச் சென்றுள்ளார். பின்னர் அவர் மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்த போது வீட்டின் முன்புறம் நிறுத்திவைக்கப்பட்ட தனது இரு சக்கர வாகனம் காணாமல் போனதை உணர்ந்தார். இதனையடுத்து அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பஸ் நிலையம் அருகில் நின்றுகொண்டிருந்த அருண்குமார் மற்றும் சத்ரியன் என்பவர்களை பிடித்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அவர்கள்தான் இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்துள்ளனர்.