மீன்பிடி திருவிழாவில் அனைவரும் ஒன்று திரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் விவசாய பணிகள் முடிந்ததும் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் மீன்பிடித் திருவிழா இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீன்பிடிக்க மேலூர் வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.
ஆனால் கொரோனா காலம் என்பதால் மீன்பிடி திருவிழாவிற்கு காவல்துறையினர் தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் மக்கள் அனைவரும் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்து சென்றுள்ளனர். இதனால் காலையில் மீன்பிடித்தல் விழாவிற்கு வந்த அனைவரும் ஏமாற்றத்துடன் சென்றுள்ளனர்.
மேலும் நள்ளிரவில் மக்கள் அனைவரும் நாட்டு வகை மீன்களான கெளுத்தி, குறவை போன்ற பல வகை மீன்களைப் பிடித்துச் சென்றுள்ளனர். ஆனால் கொரோனா காலகட்டம் என்பதால் இவ்வாறு அனைவரும் ஒன்று திரண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.