ராணிப்பேட்டையில் காவல்துறையினருடைய குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக 2,50,000 ரூபாயை மாவட்டத்திலுள்ள காவல்துறை சூப்பிரண்டு வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டினுடைய காவல்துறையில் வேலை செய்து வரும் காவல்துறையினருக்கும், அமைச்சுப் பணியாளர்களுடைய வாரிசுகளுக்கும் அவரவர்களுடைய கல்வியின் தகுதிக்கேற்ப வருடந்தோறும் கல்விக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி ராணிப்பேட்டை 2019-20 ஆம் வருடத்திற்கான கல்வி உதவித்தொகையை பெறும் காவல்துறையினரிடமிருந்தும், அமைச்சுப் பணியாளர்களிடமும் விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
அதில் 18 நபர்களுக்கு கல்வி உதவித்தொகையை பெறுவதற்கான தகுதியுள்ளவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதன்பின் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் அவர்களுக்கு தேவைப்படுகின்ற கல்வி உதவித் தொகையான 2,50,000 ரூபாயை வழங்கியுள்ளார்.