Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி அளவுக்கதிகமாக தின்னுட்டாங்களே…! மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டையில் மூதாட்டி அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 62 வயதாகின்ற ராணி என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் ராணி காது வலிக்கான மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். இதனையடுத்து அவர் தெரியாமல் அளவுக்கதிகமான மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இதில் மயக்கமடைந்து விழுந்த ராணியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |