தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடந்துவருகிறது. இன்று மதியம் முதலே தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு ஆதரவாக வரத் தொடங்கியது. மேலும் 153 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால் திமுக ஆட்சி அமைவது உறுதியானது. இதையடுத்து தேனாம்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினை சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதகிருஷ்ணன் சந்தித்து பேசினார்.
ஏற்கெனவே தமிழ்நாடு காவல்துறை கூடுதல் டிஜிபி சங்கர் ஜிவால் இன்று மாலை மு.க. ஸ்டாலின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். அதேபோல பீலாராஜேஷ் உள்ளிட்ட பல ஐஏஎஸ் அதிகாரிகள் சந்தித்துவருகிறார்கள். மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பிறகு அதிகாரிகள் மாற்றம் இருக்கும் என்பதால், முன்னரே தங்கள் பொறுப்பை தக்கவைத்துக்கொள்ள அடுத்தடுத்து அதிகாரிகள் சந்திப்பு நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. .