உறவினர் பெண்ணின் காதலுக்கு உதவி செய்வதை பெற்றோர் கண்டித்ததால் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாகொள்ளஅல்லி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உறவுக்கார பெண்ணின் காதலுக்கு வெண்ணிலா உதவி செய்வதை அறிந்த அவரது பெற்றோர் வெண்ணிலாவை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த வெண்ணிலா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனையடுத்து மயங்கிய நிலையில் இருந்த வெண்ணிலாவே அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வெண்ணிலாவுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்