Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வேகமாக பரவும் தொற்று…. பறவைகள் சரணாலயம் மூடல்…. உத்தரவிட்ட அரசு….!!

கொரோனா பரவல் காரணமாக வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி கொண்டிருப்பதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 26ஆம் தேதி முதல் சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், சுற்றுலாத்தலங்கள், கோவில்கள் ஆகியவை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்பேரில் திருவாரூர் மாவட்டத்தில் வடுகூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயமும் மூடப்பட்டுள்ளது. அதாவது வடுவூர் ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொண்ட இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Categories

Tech |