29 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதல் .
2021 ம் ஆண்டிற்கான ஐ.பி.எல் தொடரின் , 29 வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன . இந்த போட்டி அகமதாபாத்தில்உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில், நடைபெற்று வருகிறது . இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இதனால் பஞ்சாப் அணி பேட்டிங்கில் களமிறங்கி உள்ளது .தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் – மயங்க் அகர்வால் களமிறங்கினர் . இதில் பிரப்சிம்ரன் சிங் 12 ரன்னில் ஆட்டமிழந்தார் .அடுத்தாக களமிறங்கிய கிறிஸ் கெயில் 13 ரன்னில் வெளியேறினார் .
அடுத்து களமிறங்கிய டேவிட் மாலன் 26 பந்துகளில் 1 பவுண்டரி ,1 சிக்ஸர் அடித்து 26 ரன்கள் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய தீபக் ஹூடா 1 ரன் எடுத்து , ரன் அவுட் ஆகி வெளியேறினார் .இதனால் பஞ்சாப் அணி 15 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 102 ரன்களை எடுத்துள்ளது .