Categories
சினிமா தமிழ் சினிமா

கொரோனாவால் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை…. இந்தியாவிற்காக நிதி திரட்டும் பிரியங்கா சோப்ரா….!!!

பிரபல ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இந்தியாவிற்கு நிதி திரட்டும் பணியில் களமிறங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ஒரு கோடி ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.

இதேபோல் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவும் இந்தியாவிற்காக நிதி திரட்டும் பணியில் களமிறங்கியுள்ளார். கிவ் இந்தியா என்ற அமைப்பில் இணைந்து ப்ரியங்கா சோப்ரா இந்த பணியில் ஈடுபட்டு வருகிறார். இதன் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கோடியே 85 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது. இந்த நிதி பெங்களூரு மற்றும் மும்பைக்கு ஆக்ஸிஜன் வாங்க பயன்படுத்தப்படும் என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

Categories

Tech |