நெல்லையில் பைக்கின் மீது கார் மோதியதால் வியாபாரி படுகாயமடைந்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முத்துராஜ் என்பவர் வசித்து வந்திருக்கிறார். இந்நிலையில் முத்துராஜ் மசாலா பொருட்களை விற்பனை செய்கிறார். இதனையடுத்து சம்பவத்தன்று முத்துராஜ் தன்னுடைய பைக்கில் வள்ளியூருக்கு சென்றுள்ளார். இவர் நான்கு வழி சாலைக்கு அருகே சென்றுகொண்டிருக்கும்போது இவருடைய பைக்கிற்கு எதிராக வந்த கார் முத்துராஜ்ஜின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.