நெல்லையில் மின்வாரிய அலுவலரை அழுகிய நிலையில் பிணமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் மின்வாரிய ஊழியரான மோகன் வசித்துவந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் இவர் சில நாட்களாகவே வேலைக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்துள்ளார். இதனையடுத்து மோகன் கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வீட்டைவிட்டு வெளியேறியவர், அதன்பின் திரும்பி வரவேயில்லை. அவரது குடும்பத்தினர்கள் தேடிவந்த நிலையில் மோகன் உடல் முழுவதும் அழுகி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் மோகனுடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்