Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

தமிழ்நாடு வளரட்டும்…. திமுகவிற்கு நடிகர் விஷால் வாழ்த்து….!!!

முன்னணி நடிகர் விஷால் திமுகவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனால் திமுக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

இதைதொடர்ந்து பல அரசியல் கட்சி தலைவர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஷால் திமுகவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, இந்த அருமையான வெற்றிக்கு திமுக கட்சிக்கு வாழ்த்துக்கள்.

அன்பான நண்பர்கள், உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், எங்கள் முதல்வர் முக ஸ்டாலின் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். அடுத்த சில ஆண்டுகளில் வரவிருக்கும் நல்ல விஷயங்களுடன் தமிழ்நாடு வளரட்டும். நமது உடைந்த திரைப்படத்துறையில் மிகவும் தேவையான ஆக்சிஜனை எதிர்பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |