கவலைப்பட வேண்டியதில்லை பாகிஸ்தானின் எந்தஒரு சவாலையும் எதிர்க்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரிக்கப்பட்டது. இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் ஆடி போன பாகிஸ்தான் இந்தியாவுடனான வர்த்தகம் மற்றும் தூதரக உறவை முறித்துக் கொடண்டது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் இடையே இருந்து வந்த உறவில் விரிசல் அதிகரித்துள்ளது.
மேலும் இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அதிருப்தியான பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக தாக்குதல் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ,அதற்காக பாகிஸ்தானின் ராணுவப் படைகள் இந்திய எல்லையில் குவிக்கப்படுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை குறித்து புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய
இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறுகையில் , எல்லையில் பாகிஸ்தான் ராணுவ படை குவிப்பது கவலைப்பட வேண்டியது இல்லை. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் இயல்பானதாக இருக்கலாம். பாகிஸ்தானின் எந்த ஒரு பாதுகாப்பு சவாலையையும் எதிர்க்கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.