Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொரோனா வேகமாக பரவுது…. தமிழக அரசின் அதிரடி உத்தரவு…. முக்கிய அதிகாரி ஆய்வு….!!

நெல்லையில் கொரோனாவினுடைய பரவலை தடுக்கும் பொருட்டு இறைச்சிக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கொரோனாவினுடைய 2 ஆவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சில கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் அமலுக்குக் கொண்டு வந்தது. அதில் ஒரு பகுதியாக சனி மற்றும் ஞாயிறு இறைச்சி கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது. இதனால் நெல்லை மாவட்டத்திலும் சனிக்கிழமை இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

ஆனால் இதனை அறியாத சில அசைவ விரும்பிகள் சனிக்கிழமையன்று காலையில் இறைச்சிக்கடையை தேடி சென்றுள்ளனர். அங்கு கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே மாநகராட்சியினுடைய சுகாதார அதிகாரி கொரோனாவினுடைய கட்டுப்பாடுகளை மீறி இறைச்சியை விற்பனை செய்யும் கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டிருக்கிறதா என்று ஆய்வு செய்துள்ளனர்.

Categories

Tech |