Categories
உலக செய்திகள்

சுழற்றியடித்த சூறாவளி காற்று… பிரபல நாட்டை புரட்டி போட்ட தருணம்… 11 பேர் உயிரிழப்பு..!!

நேற்று முன்தினம் சீனாவில் பெய்த கனமழை மற்றும் புயலால் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் நாந்தோங் என்ற நகரில் தீடீரென பலம் வாய்ந்த புயல் ஒன்று சுமார் 162 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று போல் சுழன்றடித்துள்ளது. அதில் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அதனைத் தொடர்ந்து கனமழை விடிய விடிய கொட்டித் தீர்த்தது. அதில் நீர் நிலைகள் நிரம்பி வழிந்து ஊருக்குள் புகுந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தில் மூழ்கின. மேலும் அந்த வெள்ளம் சாலைகளில் ஆறாக ஓடியதால் சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

இதற்கிடையே மழை புயலைத் தொடர்ந்து நாந்தோங் நகரில் நூற்றுக்கணக்கான வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின. மேலும் மழை, புயல், வெள்ளம் ஆகியவற்றில் 102 பேர் படுகாயம் அடைந்ததாகவும், 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதுவரை சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Categories

Tech |