அர்ஜெண்டினாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் உள்ள வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின் அந்த வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவி பெரும் உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அர்ஜெண்டினா தற்போது 11-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அர்ஜெண்டினாவில் புதிதாக 11,394 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. அதில் 156 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். மேலும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 26.75 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.