தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் சில தொகுதிகளில் வாக்கு எந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணப்படும் அதில் தாமதம் ஏற்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளித்த தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். மாநில நலனுக்காகவும் பெருமைமிக்க தமிழ் பண்பாட்டை மென்மேலும் பறைசாற்றவும் நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம் என்று தமிழக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். கடினமாக உழைத்த நமது தொண்டர்களை பாராட்டுகிறேன் என்று பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.