Categories
மாநில செய்திகள்

பழனி பஞ்சாமிர்தத்திற்கு சர்வதேச அங்கீகாரம்…. புவிசார் அமைப்பு அதிரடி அறிவிப்பு..!!

பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்ததிற்கு  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்றான பழனியில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறீயிடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரசாதமாக முதல் பிரசாதம் இதுவே ஆகும். ஏற்கனவே மதுரை மல்லிகை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, உள்ளிட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

Image result for palani panjamirtham

இந்த வரிசையில் 29 ஆக இணைகிறது பழனி பஞ்சாமிர்தம். புகழ்பெற்ற பழனி பஞ்சாமிர்தம் தனி ருசி கொண்டது. வாழைப் பழம், வெல்லம், பசு நெய், தேன், ஏலக்காய் ஆகிய ஐந்து இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் தனித்துவம் வாய்ந்த பஞ்சாமிர்தம் முருகனுக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பின் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

Image result for palani panjamirtham

பஞ்சாமிர்தமானது திரவ நிலையில் இருந்தாலும், ஒரு சொட்டு நீரும் கலப்பது இல்லை. பராமரிப்பதற்காக எந்த ஒரு கூடுதல் சேர்க்கை பொருளையும் சேர்ப்பதில்லை. இத்தனை சிறப்புமிக்க பழனி பஞ்சாமிர்தத்தில் புவிசார் குறியீடு வழங்கக்கோரி பழனி கோவில் நிர்வாகம் விண்ணப்பித்திருந்தது. இதனை ஏற்று பஞ்சாமிர்ததிற்கு புவிசார் குறியீடு வழங்கப்படும் என்று geographic indications அமைப்பின் பதிவாளர் சின்னராஜா நாயுடு தெரிவித்துள்ளார்.

Categories

Tech |