உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 லட்சத்தை தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா தொற்று பரவ தொடங்கி ஏறத்தாழ ஒரு ஆண்டு காலமாகியும் அதன் வீரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 15.34 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றிலிருந்து 13.07 கோடிக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கொரோனாவால் 32.16 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1.87 கோடிக்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு லட்சத்து 11 ஆயிரத்திற்கு அதிகமானோர் நிலைமை தற்போது கவலைக்கிடமாக உள்ளது. கொரோனா தொற்று அதிகம் பாதித்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் முதல் 5 இடங்களில் உள்ளது.