Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆள் நடமாட்டமே இல்லை… வெறிச்சோடிய கடைவீதிகள்.. அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு…!!

தென்காசியில்  ஞாயிறு முழு ஊரடங்கால் அப்பகுதியில் உள்ள கடை வீதிகள் மற்றும் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி நிலையில் காணப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த வருடம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்குவதால் பல்வேறு அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களின் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

மேலும் இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு மீண்டும் வாரம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.இந்நிலையில் தென்காசி சிவகிரி மற்றும் செங்கோட்டை போன்ற பகுதிகளில் முழு ஊரடங்கின்போது பொது மக்களின் நடமாட்டம்  இல்லாமலும், பேருந்துகள் மற்றும் வாகனங்களின் சத்தம் இல்லாமலும் சாலைகள் அமைதியான நிலையில் காணப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு தினசரி தேவைக்கான பால் கடைகள் மற்றும் மருந்துக் கடைகளைத் தவிர பிற எந்தவிதமான கடைகளும் திறக்கப்படவில்லை.

மேலும் பாவூர்சத்திரம் பகுதியில் தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்த 100 பேரை போலீசார் அழைத்துச் சென்று அவர்களின் மீது அபராதம் விதிக்கப்படும் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து செங்கோட்டை பகுதியில் அமைந்துள்ள வாகன சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது. அவ்வழியாக வாகனங்களில் வருபவர்கள் தங்களது தேவைக்கான அனுமதி சீட்டு பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் கேரள மாநிலத்தில் இருந்து அவ்வழியாக வரும் வாகனங்கள் கேரள மாநிலத்தில் இருந்து அனுமதி சீட்டு பெற்று வந்தாலும்  அவர்களுக்கு சோதனை சாவடியில் உள்ள அதிகாரிகள் கொரோனா பரிசோதனை செய்த பிறகே  செல்ல அனுமதித்துள்ளனர்.

Categories

Tech |