Categories
தேசிய செய்திகள்

“இனி ட்விட்டரில் தவறு செய்தால் ட்வீட்டை நீக்க வேண்டாம்”…. வரப்போகுது புதிய வசதி…!!

டிவிட்டரில் தவறாக பதவியேற்றிய டிவிட்டை மொத்தமாக நீக்காமல் அதிலுள்ள பிழையை மட்டும் திருத்தும் வசதி விரைவில் வரப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிவிட்டில் தவறாக ஏதாவது எழுத்துப் பிழையோ, கருத்துப் பிழையோ, தகவல் பிழையோ இருந்தால் அதை மொத்தமாக நீக்கிவிட்டு புதிதாகத்தான் டிவிட் செய்ய வேண்டும். எனவே, தவறுதலாக பகிரப்படும் மற்றும் பிழையோடு இருக்கும் டிவிட்களை திருத்தும் வசதியை நீண்ட காலமாகவே டிவிட்டர் பயனர்கள் கேட்டு வந்தனர்

இந்நிலையில், பயனர்களின் கோரிக்கையை ஏற்று டிவிட்டர் நிர்வாகம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. பதிவேற்றிய டிவிட்களை திருத்த ‘அன்டூ டிவிட்’ ஆப்ஷனை கொண்டு வரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம், பதிவேற்றம் செய்யும் டிவிட்களை குறிப்பிட்ட சில நேரம் வரை திருத்தம் செய்வதற்கான வசதி வழங்கப்படும். ஆனால், இந்த வசதி பணம் செலுத்தி சப்ஸ்கிரிப்ஷன் செய்யும் பயனர்களுக்கு மட்டுமே வழங்க டிவிட்டர் முடிவு செய்துள்ளது. இது குறித்து டிவிட்டர் நிர்வாகம், சோதனை முயற்சியில் உள்ளது என்பது குறி்ப்பிடத்தக்கது.

Categories

Tech |