ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட தங்கபாண்டியன் வெற்றி பெற்றுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் கடந்த ஏப்ரல் 6 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றுள்ளது. இத்தொகுதியில் மொத்தம் 2,38,701 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இங்கு 73.86% வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனையடுத்து சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று நடைபெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து திமுக சார்பில் போட்டியிட்ட சௌ.தங்கபாண்டியன் தலா 74,158 வாக்குகள் பெற்றுள்ளார்.
அதிமுக சார்பில் போட்டியிட்ட ராஜேந்திர பாலாஜி தலா 70,260 வாக்குகள் பெற்றுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வ. ஜெயராஜ் 15,593 வாக்குகள் பெற்றுள்ளார். இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிட்ட சௌ.தங்கபாண்டியன் தலா 4,798 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியை திமுகவினர் பாதுகாப்பாகவும், ஊரடங்கு விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் கொண்டாடினர்.