Categories
மாநில செய்திகள்

கடைசி நேரத்தில் கூட்டணி சேர்ந்ததால் தொய்வான முடிவு…. விஜயகாந்த்….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதில் முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. சில தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் கோளாறு காரணமாக வாக்குகள் எண்ணும் பணி நிறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது. அதன்பிறகு ஒவ்வொரு தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த பிறகு வெற்றி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் 232 தொகுதிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் திமுக கூட்டணி 159 இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பிடித்துள்ளது. ஒருவர் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் திமுக மட்டும் 125 தொகுதிகளில் வாகை சூடியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சர் ஆகிறார்.

இந்நிலையில் கடைசி இரண்டு நாளில் அமமுக உடன் கூட்டணி சேர்ந்ததால் தேர்தலில் தொய்வான முடிவு கிடைத்ததாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் மக்கள் வழங்கிய தீர்ப்பை மனமார ஏற்றுக் கொள்கிறேன். வருங்கால வெற்றியை இலக்காகக் கொண்டு பயணித்தே நம்முடைய அடையாளத்தை நிரூபிப்போம் எனவும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |