Categories
சினிமா தமிழ் சினிமா

‘பூவா தலையா’…. சன் டிவியின் புதிய நிகழ்ச்சி…. வெளியான செட் புகைப்படம்…!!!

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய நிகழ்ச்சி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளனர். அதே போல் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் புதிதாக ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. அதன்படி இந்நிகழ்ச்சிக்கு ‘பூவா தலையா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சி எப்படிப்பட்டது என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் பூவா தலையா நிகழ்ச்சியின் செட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்க்கும்போது இந்நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

https://www.instagram.com/p/COU6AywhXZQ/

Categories

Tech |