திருச்சியில் கொரோனா தொற்றின் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
உலக அளவில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் நாள்தோறும் 400க்கும் மேற்பட்டோர் நோய் தொற்றால் பாதிப்படைந்து வருகிறார்கள். இதனை அடுத்து அதிக அளவாக 578 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 250 ஆக உள்ளது. இதனைத் தொடர்ந்து 3061 பேர் கொரோனா தொற்றிருக்குக்கான சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறனர்.
அதன் பின் இந்த மாவட்டத்தில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது. இதனை அடுத்து ஒரே நாளில் கொரோனா நோய்தொற்றுக்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.