Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நாங்க அப்படித்தான் செய்வோம்… தட்டிகேட்ட வாலிபர்கள்… போதையில் வெறிச்செயல்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மது அருந்தி கொண்டிருந்தவர்களை போக சொல்லிய வாலிபர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியிலிருக்கும் பெருமாள்பட்டியில் பரக்கத்துல்லா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வகுமார் மற்றும் சுரேஷ்குமார் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். இவர் அவுலியாநகரில் புதிதாக கட்டிடம் கட்டி வருகின்றார். இந்நிலையில் கட்டிடத்தின் அருகே அவுலியாநகரை சேர்ந்த சர்க்கரை மீரா உட்பட சிலர் கூட்டமாக மது அருந்தி கொண்டிருந்துள்ளனர்.

இதனைப்பார்த்த பரக்கத்துல்லா இந்த இடத்திலிருந்து மது அருந்த வேண்டாம் என்றும் இடத்தை விட்டு போக சொல்லும்படி செல்வகுமாருக்கு செல்போனில் கூறியுள்ளார். இதனையடுத்து செல்வகுமார் மற்றும் சுரேஷ்குமார் இருவரும் அவுலியாநகருக்கு வந்து மது அருந்தி கொண்டிருந்தவர்களிடம் இந்த இடத்தை விட்டு போகும் படி கூறியுள்ளனர். அப்போது மது அருந்தி கொண்டிருந்தவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் செல்வகுமார் மற்றும் சுரேஷ்குமார் இருவரையும் தலை, கால், கை என பல இடங்களில் அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இரண்டு பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதுக்குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |