சட்ட விரோதமாக மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொள்ளகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வெள்ளைகேட், கோனேரிகுப்பம், வெளியூர் சுடுகாடு, ஈஞ்சம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்து வருவதாக காஞ்சிபுர காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதிகளுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மறைமுகமாக மது பாட்டில்களை வைத்து அதனை சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதிகளில் மது பாட்டில்களை விற்ற கோனேரி குப்பம் சரசு, எரிவாக்கம் சதீஷ்குமார், காரப்பேட்டை சதீஷ், வெளியூர் தணிகாசலம், செட்டியார்பேட்டை அரவிந்த் ஆகியோர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 50 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.