Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாலி’ படத்தில் சிம்ரன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா?… வெளியான புதிய தகவல்…!!!

வாலி படத்தில் முதலில் சிம்ரன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் சிறந்த நடிகராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா . இவர் நடிகர் என்பதை தாண்டி இயக்குனராக ரசிகர்களை பெரிதும் கவர்ந்தவர். இவர் இயக்கிய குஷி, வாலி உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நடிகர் அஜித் நடிப்பில் கடந்த 1999ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வாலி. இந்நிலையில் இந்த படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வாலி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார்.

21 Years of Vaali: A nostalgic lookback at Ajith Kumar's impressive  double-role debut- Cinema express

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை கிரண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பின்னர் சில காரணங்களால் கிரண் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது . இதன்பின் நடிகை மீனாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவரும் சில காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக கடைசியாக சிம்ரனுக்கு வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

Categories

Tech |