இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு , உதவி செய்யும் வகையில் ஐபிஎல் போட்டியில் பங்குபெற்றுள்ள, அணிகள் மற்றும் வீரர்கள் உதவி செய்து வருகின்றனர்.
இந்தியாவில் தற்போது பரவியுள்ள கொரோனா தொற்றின் 2ம் அலை கோரத் தாண்டவம் ஆடுகிறது. இதனால் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில், நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே மக்கள் மருந்துகள் மற்றும் ஆக்சிசன் தட்டுப்பாட்டால், உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஆக்சிசன் தட்டுப்பாட்டிற்கு ,அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்பில் பல்வேறு முயற்சிகள் மற்றும் நிதி உதவிகளை செய்து கொண்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும், ஐபிஎல் நிர்வாகம் மற்றும் வீரர்கள் நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
இதில் ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் ஒன்றான, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிதி உதவி வழங்க முடிவு செய்துள்ளது. இனி வரும் போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் , ஆர்சிபி அணி வீரர்கள் கொரோனா நிதி திரட்டுவதற்காக ,நீல நிற உடை அணிந்து விளையாட உள்ளதாக , அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். அதோடு அந்த சீருடையில் வீரர்களின் கையெழுத்திட்டு, அதனை ஏலத்தில் விட்டு அதன்மூலம் நிதி திரட்டப் பட உள்ளதாக கூறினார். இதைதொடர்ந்து மக்கள் விழிப்புணர்வோடும், பாதுகாப்புடன் வீட்டியில் இருக்கும்படியும் , அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.