Categories
தேசிய செய்திகள்

கொரோனா இரண்டாவது அலை: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் குட்டு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே காரணம். இதற்காக கொலை வழக்கு பதியலாம் என்று சென்னை ஐகோர்ட் கூறியதையடுத்து தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தது. இதில் தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நீதிமன்ற ஆய்வுக்கு வராது எனக் கூறுவது தவறு என உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

Categories

Tech |