நடிகை ரெஜிஷா விஜயன் நடிகர் சூர்யா நடிக்கும் படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் நடிகை ரெஜினா விஜயன் கர்ணன் திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். நடிகர் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. மலையாள நடிகையான ரெஜிஷா விஜயன் தனது முதல் படத்திலேயே ஏராளமான தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் .
இந்நிலையில் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தில் ரெஜிஷா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் படத்திலும் ரெஜிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது . தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகி வருவதால் விரைவில் ரெஜிஷா தமிழில் முன்னணி நடிகையாக உயர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.