Categories
தேனி மாவட்ட செய்திகள்

கம்பம் தொகுதி…. 40,000 த்திற்கும் மேல் வாக்கு வித்தியாசம்…. கெத்து காட்டிய தி.மு.க….!!

தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் தி.மு.க வேட்பாளரான என்.ராமகிருஷ்ணன் 42,413 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தேனியிலிருக்கும் கம்பம் தொகுதியில் மொத்தமாக 15 வேட்பாளர் போட்டுள்ளனர் இத்தொகுதியில் பதிவான வாக்குகளை தேனியிலிருக்கும் கொடுவிலார்பட்டியில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரி ஒன்றில் எண்ணப்பட்டது. இதன் முடிவில் தி.மு.க வேட்பாளரான என்.ராமகிருஷ்ணன் 43,413 வாக்குகள் அ.தி.மு.க வேட்பாளரான எஸ்.பி.எம் சையதுகானை விட அதிகமாக பெற்று வெற்றி வாய்ப்பை சூடினார்.

இத்தொகுதியில் மொத்த வாக்குகள் 2,86,645 ஆகும். இதில் தேர்தல் நாளன்று பதிவானவை 2,02,275 ஆகும். இந்நிலையில் தி.மு.கவினுடைய வேட்பாளரான என்.ராகிருஷ்ணன் 1,04,800 வாக்குகளையும், எஸ்.பி.எம் சையதுகான் 62,387 வாக்குகளையும் பெற்றுள்ளார்கள். இத்தொகுதியில் தி.மு.க வேட்பாளரான ராமகிருஷ்ணன் 5 ஆவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

Categories

Tech |