தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கப்போகும் தி.மு.க விற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு பின்பு திமுக ஆட்சி அமைத்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்று முதலமைச்சர் ஆகிறார். இதனைத்தொடர்ந்து பலரும் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறிவருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்கார் நாயகனான, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன் ட்விட்டர் பக்கத்தில் தி.மு.கவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய, இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!🇮🇳🤲🏼🤝#tamilnadu
— A.R.Rahman (@arrahman) May 3, 2021
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, “கல்வி, சமூக நீதி மற்றும் சுகாதாரம் போன்றவற்றில் தமிழகம் வரலாறு காணாத வளர்ச்சியை அடைவதற்கும், இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு உதாரணமாய் திகழவும் தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.