Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ…! திமுகவுக்கு வாக்களிக்க வில்லையே… உணரவைக்கும் ஸ்டாலின்…. சமாதியில் உறுதி….!!

bசட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து நேற்று நள்ளிரவில் அண்ணா சமாதி கலைஞர் சமாதியில் மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் முக. ஸ்டாலின் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்களை எல்லாம் ஆளாக்கிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழ்நாட்டினுடைய ஆட்சிப் பொறுப்புகளில் முதலமைச்சராக இருந்து தமிழகத்தின் மக்களுக்கு செய்து இருக்கக்கூடிய பணிகள், அதை எல்லாம் உணர்ந்து அவர் வழிநின்று, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழக ஆட்சியின் சார்பில் அதை எல்லாம் நிச்சயம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எப்படி எங்களை பயிற்றுவித்து இருக்கிறார்களோ, அந்த வழி நின்று எங்கள் கடமையை நிச்சயமாக ஆற்றுவோம்.

இன்னும் வெளிப்படையாக நான் சொல்ல வேண்டுமென்று சொன்னால் அவர் இருந்த காலத்திலே ஆறாவது முறையும் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நாங்கள் எண்ணியிருந்தோம். ஆனால் அது நிறைவேறாமல் போய்விட்டது என்பது எங்களுக்கு ஒரு ஏக்கமாக இருந்து வந்தது. ஆனால் அந்த ஏக்கம் இன்றைக்கு நிறைவேறி இருக்கின்றது என்பதை நான் உணர்கிறேன். மக்கள் குரலே மகேசன் குரல் என்று அண்ணா அவர்கள் சொல்லுவார்கள்.

ஆகவே மக்கள் அளித்து இருக்கக்கூடிய இந்த தீர்ப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டு ஏதோ எங்களுக்கு ஆதரவு அளித்தவர்கள், வாக்களித்தவர்கள் என்று இல்லாமல், எங்களுக்கு வாக்களிக்கத் தவறியவர்கள் அவர்களுக்கும் சேர்த்து, இவர்களுக்கு நாம் வாக்களித்தது நன்மைதான் மகிழ்ச்சிதான் என்று உணரக்கூடிய வகையில், வாக்களிக்காதவர்கள் இவருக்கு நாம் வாக்களிக்காமல் போய் விட்டோமே என்று மக்கள் என்ன கூடிய அளவிற்கு நிச்சயமாக எங்களுடைய பணி அமையும் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |