கடுமையான சுவாசப் பிரச்சனையால் அவதிப்படும் ரிவால்டோ யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை ஒன்று கடந்த சில ஆண்டுகளாக சுற்றி வருவதோடு பொது மக்களின் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் செல்லாமல் அங்கு உள்ள குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிந்ததால் மக்களுடன் பழகும் நிலைக்கு மாறிவிட்டது. எனவே இந்த யானையை பொதுமக்கள் ரிவால்டோ என்று அழைத்து வருகின்றனர்.
இந்நிலையில் வனத்துறையினர் ரிவால்டோ யானையின் பாதுகாப்பு கருதி அதனை முதுமலைக்கு அழைத்துச் செல்ல பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்து விட்டது. எனவே சுவாசப் பிரச்சனையால் அவதிப்படும் அந்த யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கடுமையான சுவாசப் பிரச்சனையால் சிரமப்படும் காட்டு யானைக்கு சிகிச்சை அளிக்கும் பணியானது சில தினங்களில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.