இளம் பெண் குளித்துக் கொண்டிருக்கும்போது எட்டிப்பார்த்த வடமாநில தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மணல் பகுதியில் கௌதம் என்ற வடமாநில தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கௌதம் அதே பகுதியில் வசிக்கும் திருமணமான 23 வயது இளம்பெண் அவரது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்த போது எட்டி பார்த்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு அங்கிருந்து கௌதம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கௌதமை கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர்.