பஜாஜ் நிறுவனம் தனது புதிய பல்சர் 125 சிசி பைக் அறிமுகம் செய்துள்ளது.
பஜாஜ் நிறுவனத்தின் மிகச் சிறந்த பைக்காக பல்சர் காணப்படுகிறது. பஜாஜ் நிறுவனம் 150, 180, 220 என்று பல்வேறு சிசி கொண்ட பைக்குகள் அறிமுகம் செய்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் 125 நியான் பைக்கை இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்துள்ளது.
இதில் முன்பக்க டிஸ்க் வகை பைக் விலையானது 66,618 ரூபாயாகவும், ட்ரம் பிரேக் மாடல் பைக் விலையானது 64,000 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கில் DTS-i இன்ஜின் கொண்ட 8500 ஆர்.பி.எம் உள்ள 11.8 bhp பவரையும், 6500 ஆர்.பி.எம் கொண்ட 11 Nm அதிக டார்க்கும் மற்றும் 140 Kg எடை கொண்ட கேர்ப், 5 ஸ்பிட் கியர் பாக்ஸ் வைக்கப்பட்டு எந்த கியரிலும் ஸ்டார்ட் செய்யும் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் Neon Blue, Solar Red, Platinum Silver போன்ற மூன்று வண்ணங்களில் பஜாஜ் 125 பைக் விற்பனை செய்யப்படுகிறது. இதை பற்றி பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் சராங் கண்ணடே ‘125 சிசி வகை பல்சர் பைக்கை அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். SPORTS மாடல் பைக்கை சிறந்த ஸ்டைலில் வாங்க விரும்பும் மக்களுக்கு பல்சர் 125 நியான் ஒரு சிறந்த பைக்காக அமையும் என்று கூறினார்.