இந்தியாவுக்கான டாடா நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் நெக்சான் எஸ்.யு.வி. 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அன்று முதல் இந்திய சந்தையில் SUV பிரிவில் பிரபல மாடலாக இருக்கிறது. தற்போது அதன் ஸ்பை படங்கள் முதன் முதலாக இணையத்தில் வெளியாகியுள்ளது. ஸ்பை படங்கள் மூலம் நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
மேலும், காரின் முன்புறம் ஹெட்லேம்ப் கிளஸ்டர், மேம்பட்ட ஏர் இன்டேக் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் டாடாவின் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கிறது. ஹேரியர் மாடலில் அறிமுகமான இம்பேக்ட் 2.0 வடிவமைப்பை தழுவி புதிய நெக்சான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் பல்வகை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இருக்கைகளில், டேஷ்போர்டு மற்றும் கேபின் ஆகியவற்றில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த நெக்சான் ஃபேஸ்லிஃப்ட் கார் கடும் கிராஷ் சோதனைகளை எதிர்கொள்ளும் என தெரிகிறது.