Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை தொகுதி…. சட்டமன்ற தேர்தல் முடிவுகள்…. வெற்றியைத் தட்டிச் சென்ற பா.ஜ.க….!!

திருநெல்வேலி மாவட்டம் நெல்லை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

திருநெல்வேலியில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதில் ஒன்றான நெல்லை தொகுதியில் 2,92,800 வாக்காளர் இருக்கின்ற நிலையில், தேர்தல் நாளன்று மொத்தமாக 1,95,496 வாக்குகள் பதிவாகியது. அதாவது 66.90 சதவீத வாக்கு பதிவாகியது. இத்தொகுதியில் அ.தி.மு.க கட்சியினுடைய கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நயினார் நாகேந்திரன் என்பவரும், தி.மு.க சார்பாக லஷ்மணன் உட்பட மொத்தமாக 14 வேட்பாளர் போட்டியிட்டுள்ளனர்.

இந்நிலையில் பதிவான வாக்குகளை எண்ண தொடங்கியதிலிருந்தே பாரதிய ஜனதா கட்சியினுடைய வேட்பாளரான நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து இறுதியாக நயினார் நாகேந்திரன் 92,282 வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். மேலும் இத்தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்து தி.மு.க வேட்பாளரான லட்சுமணன் போட்டியிட்டதில் அவருக்கு 69,175 வாக்குகளை பெற்றுள்ளார்

Categories

Tech |