Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்…. மாஸ்க் அணியாதவர்களிடம் 25 நாட்களில்…. அபராதம் வசூல் எவ்வளவு தெரியுமா…??

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது.

எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றது. முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் 25 நாட்களில் ரூ.14.54 கோடி அபராதம் காவல்துறையினரால் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |