கேரளாவுக்கு உதவுங்கள் எங்களுக்கு உதவி வேண்டுமென்று கேரளா முதல்வர் அடுத்தடுத்து 5 ட்வீட் தமிழில் பதிவிட்டுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கேரளாவில் கனமழை பெய்துவருகிறது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி கேரள மாநிலத்தின் திருச்சூர் , பாலக்காடு , மலப்புரம் , கோழிக்கோடு , கண்ணூர் , இடுக்கி , எர்ணாகுளம் ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தது.அதேபோல ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை கனமழை பெய்தது.
இந்த மூன்று நாட்களில் மட்டும் பெய்த கனமழையால் கேரள மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் சிக்கி 91 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காயமடைந்ததாகவும், 59 பேரை காணவில்லை என்றும் கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 1,243 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு , அதில் 2 லட்சத்து 24 ஆயிரத்து 506 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு பல்வேறு பகுதியில் இருந்து மக்கள் நிவாரண உதவி செய்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ய்பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது.
கேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகை தேவை. சிருதா, பெரிதா வேற்பாட இல்லை.. முடிந்த அளவுக்கு உதவுங்கள்.— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 13, 2019
இதற்க்கு ஏற்றார் போல அம்மாநில முதல்வர் பினராய் விஜயன்_னும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றார். கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் வெள்ளம் கேரளத்தை துவைத்து எடுத்த போது கேரளாவுக்கு தமிழகம் துணையாக நின்றது. பள்ளி , கல்லூரி மாணவர்கள் நிவாரண பொருட்கள் அனுப்பினர். பொதுமக்கள் , சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கேரளவுக்காக கையேந்தி நிவாரண உதவி செய்தனர் .
நூற்றாண்டு கண்ட பெரு வெள்ளதுக்க ஒரு வருடம் பிறகுதான் இந்த பேரழிவு என்கிறதும் குறிப்பிடத்தக்கது. UN மதிப்பீடு பிரகாரம் இந்த நெருக்கபியை மீண்டுவதற்கு 31,000 கோடி ரூபா தேவை.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 13, 2019
தமிழகத்தின் இந்த உதவிக்கு நெகிழ்ந்து போன கேரளா கஜா புயலின் போது டெல்ட்டா மாவட்டத்தை தாங்கி பிடித்தது. இந்நிலையில் தற்போது கேரளத்தை வெள்ளம் மூழ்கடித்துள்ள நிலையில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தன்னுடைய ட்வீட்_டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டு உதவியை கோரியுள்ளார்.
தர்ப்போது அரசு நிவாரண முகாம்களில் தங்கி வரும் அந்த பகுதி மக்களை இன்றைக்கு சந்தித்தேன்.
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 13, 2019
அவர் பதிவிட்டுள்ள ட்வீட்_டில் , இந்த வருடம் கேரளாவில் மழைக்கெடுத்தியல் அதிகமாக பாதிக்கப்பெட்டது வயநாட் மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும் தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊரு மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை.
மழைக்கெடுத்தியால் பாதிக்கப்பெட்டவர்களுக்கும் உயிர் இழந்தவரின் குடும்பதார்க்கும் முடிந்த அளவு உதவி பண்ண கேரள அரசு முயற்சி செய்து வருகிறது. செவ்வாய் கிழமை சாயந்தனம் வரைக்கும் 91 நபர்கள் உயிர் இழந்தார்கள். 1243 அரசு முகாம்களிலாக 224506 மக்கள் தங்கிவருகிறார்கள்
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 13, 2019
இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு உதவி தேவையில்லை என்று சில நபர்கள் பொய்ய்பிரச்சாரம் செய்கிறார்கள். இது எங்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. கேரள மக்களுக்கு உங்க உதவிகள் மிகை தேவை. சிருதா, பெரிதா வேற்பாட இல்லை.. முடிந்த அளவுக்கு உதவுங்கள். என்று அடுத்தடுத்து 5 ட்வீட்_டை தமிழில் பதிவிட்டுள்ளார். கேரள முதல்வரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்ததோடு , உங்களை போல யாருமில்லை , எங்களுக்கும் இதே போல முதல்வர் இல்லையே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வருடம் கேரளாவில் மழைக்கெடுத்தியல் அதிகமாக பாதிக்கப்பெட்டது வயநாட் மாவட்டம் புத்துமலை, மேப்பாடி பகுதிகளும் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பூதானம், கவளப்பாரை பகுதிகளும் தான். இந்த அதிர்ச்சியிலிருந்து அந்த ஊரு மக்கள் இன்னும் மீண்டுவரவில்லை
— Pinarayi Vijayan (@pinarayivijayan) August 13, 2019