Categories
சினிமா தமிழ் சினிமா

‘புதுப்பேட்டை’ படத்தில் சினேகா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர் தானா?… யாருன்னு பாருங்க…!!!

புதுப்பேட்டை படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான புதுப்பேட்டை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தில் சினேகா மற்றும் சோனியா அகர்வால் இருவரும் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

gayathri-raghuram-cinemapettai

இந்நிலையில் இந்த படத்தில் சினேகா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை காயத்ரி ரகுராம் தான். ஆனால் போட்டோ ஷூட் எடுத்து முடித்த பிறகு புதுப்பேட்டை படத்தின் படப்பிடிப்பு ஆறு மாதம் கழித்து தான் தொடங்கும் என இயக்குனர் செல்வராகவன் கூறியதால் அந்த படத்தில் இருந்து காயத்ரி விலகிவிட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |