Categories
உலக செய்திகள்

“ஹாங்காங் எல்லையில் படைகள் குவிப்பு” எல்லோரும் பாதுகாப்பா இருங்க… அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை..!!

ஹாங்காங்கை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சீனா தங்களது படைகளை குவித்துள்ளதால் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று  அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக  சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் அரசை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்றால் ஹாங்காங் குற்றவாளிகளை சீனாவுக்கு அரசு அழைத்து செல்கிறது. ஆகவே அரசின் இந்த முடிவை எதிர்த்து மக்களின் போராட்டம் தொடங்கியது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து அரசு தனது முடிவை திரும்ப பெற்றது. இருப்பினும் ஹாங்காங் நிர்வாக ஆட்சியாளர் கேரிலாம் பதவி விலகக்கோரி போராட்டங்கள் நீடித்து வருகின்றன.

Image result for Everyone should be calm and safe -Donald Trump..!!

இந்த சூழ்நிலையில் ஹாங்காங்கை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் சீனா தங்களது படைகளை குவித்து வருவதை உளவுத்துறை தகவல்கள் உறுதியாக தெரிவிக்கிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கவேண்டும் என்று ட்ரம்ப் தனது ட்விட்டரில் கூறியிருந்தார். கிட்டத்தட்ட 10 வாரங்களுக்கும் மேலாக ஹாங்காங்கில் போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்குவதற்காக சீனா தனது படைகளை பயன்படுத்தும் என சொல்லப்பட்டு வந்த நிலையில் ட்ரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |