Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலியாகும் உயிர்கள்.. இந்திய அரசின் புதிய திட்டம்..!!

இந்திய அரசு, கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தயாரிக்கும் ஆலைகளுக்கு அருகில் ஆக்சிஜன் வசதிகொண்ட 10,000 படுக்கைகளுடன் மருத்துவமனைகள் அமைப்பதற்கு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவும் நிலை தொடர்பில், பிரதமர் நரேந்திர மோடி பல துறையை சேர்ந்தவர்களுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி இருக்கிறார். அதன் பிறகு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் பல இடங்களில் இருக்கும் மின்னுற்பத்தி ஆலைகள், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள், உருக்காலைகள் போன்றவற்றில் ஆக்ஸிஜன் தயாரிக்கும் நிலையங்கள் இருக்கின்றன.

ஆனால் அங்கு தயாரிக்கப்படும் ஆக்சிஜனை மருத்துவத்திற்காக பயன்படுத்த இயலாது. எனினும் அதனை மருத்துவபயன்பாட்டிற்கு ஏற்றதாக மாற்ற முடியும். எனவே ஆக்ஸிஜன் தயாரிக்கப்படும் பகுதிகளுக்கு அருகில் ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிகமான மருத்துவமனை அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நகரங்கள், மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகள் மற்றும் ஆக்சிஜன் தேவைப்படும் பகுதிகள் போன்றவற்றிற்கு அருகே இருக்கும் ஆலைகளை கண்டறியப்பட்டுள்ளன. ஐந்து இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் சோதனை செய்வதற்காக அமைக்கப்பட்டிருக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனுமதியுடன், அங்கிருக்கும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள், பொதுத்துறை அல்லது தனியார் நிறுவனங்களின் வாயிலாக இயக்கப்படும்.

மேலும் விரைவாக சுமார் 10,000 ஆக்சிஜன் வசதி படுக்கைகள் உள்ள தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பதற்கு அரசு முடிவெடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவத்துறை கற்கும் இறுதியாண்டு மாணவ மாணவிகள் மற்றும் செவிலியர் பயிற்சி மாணவ மாணவிகள் போன்றோரை கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடவைக்கவும், அதற்காக அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |