Categories
தேசிய செய்திகள்

கேரளா: இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி…. உற்சாகமுடன் மக்களுக்கு நன்றி….!!

கேரள சட்டசபை தேர்தலில் மீண்டும் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த உற்சாகத்தில் கேரள வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு மே 2-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து உற்சாகம் அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி செய்திக்குறிப்பில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது முழுமையாக நம்பிக்கை வைத்து வாக்களித்த கேரள மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா பாதிப்பால் பெரும் அவதிக்கு தள்ளப்பட்ட மக்கள் சந்தித்த சவால்களை இடதுசாரிக் கூட்டணி அரசு சிறப்பாக கையாண்டு வந்துள்ளது.

அதன்பின் கேரளா மாநிலம் தற்போது கொரோனாவால் ஏற்பட்ட வாழ்வாதாரப் பிரச்சினை மற்றும் மத சார்பின்மையை பாதுகாப்பது என்ற இரட்டை ஆபத்துகளை சந்தித்து வருகின்றது. அதில் இடதுசாரி கூட்டணி தன் பணியை தகுந்த முறையில் நிறைவேற்றி வருகின்றது. இந்நேரத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த மக்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இனி கொரோனாவை அனைவரும் ஒன்றாக இணைந்து முறியடித்து விரட்டுவோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |